ஊரடங்கு நீடிக்கப்படுமா? - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்.

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் செல்லாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள 10 நாட்கள் முடக்கல் நிலைக்காகத்தான், 2,000 ரூபா வழங்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்காகத்தான் 5,000 ரூபா வழங்கப்பட்டது.

எனவே, தற்போது 10 நாட்களுக்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 அல்லது 5 நாட்களுக்கு நீடிக்குமா என்பது தமக்குத் தெரியாது என்றும், எனினும், நிச்சயமாக அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் இந்த நிலை தொடராது எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் 5000 ரூபா வழங்கப்பட்டவர்களுக்காக, அதிகபட்சமாக 14 நாட்களுக்காக 2,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபா போதாது என்ற போதிலும், எவ்வளவாவது தொகையை வழங்க வேண்டும்.

2,000 ரூபா வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் நிதிநிலை சிறப்பாக இல்லை.

இந்த விடயத்தில் மக்களுக்கு உண்மையைக்கூற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.