நாடு மீண்டும் முடங்கலாமென எச்சரிக்கை!

நாட்டின் தற்போதைய நிலைமையின் ஆபத்தை உணராமல் இருந்தால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பொருளாதாரமும் பாரிய சரிவை சந்திக்குமெனவும், இதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் பரவிவரும் வைரஸானது மிகவும் வேகமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் ஆற்றல் கொண்டுள்ளதாகவும் அந்த சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இந்நிலை தொடருமானால் இதைவிட வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பிரதான பொறுப்பை தேசிய தொற்று நோய் பிரிவினருக்கு வழங்குமாறும், அதனூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் 6 உப குழுக்களை நியமிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.