நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8000தை தாண்டியுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம்(25) கொவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நாளொன்றில் முதல் தடவையாக 200ஐ தாண்டிய கொவிட் மரணங்கள் நேற்று(25) நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4602 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 412, 370 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 2,139 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.
அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 351, 069 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment