வார இறுதியில் பயணக்கட்டுப்பாடா? இராணுவத் தளபதி வௌியிட்ட அறிவிப்பு.

வார இறுதி நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணி கூட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார நிபுணர்கள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் நாட்டின் தற்போதைய நிலையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த 11 ஆம் திகதி அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் ஒரேநாளில் அடையாளங் காணப்பட்டமை ஆகியன காரணமாக நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

அத்துடன் எதிர்வரும் சிலவாரங்களுக்கு நாட்டில் கடுமையான முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படும் பட்சத்தில் 20 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்களை தடுக்க முடியும் என மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.