சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பொதுமக்களுக்கு ஓர் அறிவித்தல்

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவ்வாறே 60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கொவிட் தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் தொற்றுறுதியானவர்களே தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, இதனை தற்போது தடுத்தால் இதன் பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தெரியவரும்.

இந்த செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும். இதனை தற்போது நிறுத்துவதனால் தொற்று பரவலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.