தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்களை பள்ளிவாசல்கள் ஊடக திரட்ட திட்டம் - வக்பு சபை தலைவர்.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் முஸ்லிம் சமூகம் அக்கைற காட்டுவது போதாது என கொவிட் 19 தடுப்பு செயலணியின் சுகாதார அதிகாரிகள், பிரேதச, மாவட்ட செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இனங்கண்டுள்ள நிலையில் அவ் அதிகாரிகள் இது தொடர்பில் வக்ப் சபையின் ஒத்துழைப்பினை கோரியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமாேனார் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டாததால் அவ்வாறானவர்களின் தரவுகளை தற்போது நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மூலம் திரட்டப்பட்டு வருவதாக வக்ப் சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை பூரணப்படுத்த வேண்டும் என அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் இவ்விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது. 

பள்ளிவாசல்கள் முலம் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஊடாக திரட்டப்பட்டுவரும் இப்பணிக்கு பள்ளிவாசல் நிர்வாகங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.