நாள் ஒன்றுக்கான அதிகப்படியான கொவிட் மரணங்கள் பதிவானது.

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் இறுதியாக  பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம்  மாத்திரம் நாட்டில் 124 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கொவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாத்திரம் 2,890 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,982 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.