ஒரே நாளில் 82 பேர் பலி; தொற்றாளர்களும் சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் இன்று இதுவரை 2,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் 9மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,737 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 284,524 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் நேற்று(03) கொவிட் தொற்றால் 82 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.