நாட்டில் கொவிட் மரண எண்ணிக்கை 5000ஐ கடந்தது!

நாட்டில் நேற்றும் 98 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 5000 ஐ கடந்தது.

உயிரிழந்தவர்களில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரையில் 2,796 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.