2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படும் விதம் தொடர்பான அறிவிப்பு.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக்கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களின் பெயர்பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பெயர் பட்டியல் தற்போது தயாராகிவிட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நிதியமைச்சில் இருந்து பிரதேச செயலாளர்கள் அலுவலகத்திற்கு இந்த பணத்தொகையை அனுப்பி அதன் ஊடாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் குறித்த நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் குறித்த அறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.