அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத வேதனத்தை இடுகம கொவிட் நிவாரண நிதியத்துக்கு வழங்குவது தொடர்பில் பிரதமரினால் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் கொவிட் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்காக பாரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தமது ஆகஸ்ட் மாத வேதனத்தை கொவிட் நிவாரண நிதிக்காக செலுத்தி நாட்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத வேதனங்களும் கெவிட் நிவாரண நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
Post a Comment