விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரெபிட் அன்டீஜன் பரிசோதனையின் ஊடாக, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தமது அமைச்சில் கடமையாற்றும் மற்றும் தம்முடன் நெருங்கி பழகிய சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, குறித்த இரண்டு அமைச்சர்களும் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
Post a Comment