12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – பாடசாலைகள் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் பிரதமர் மஹிந்த வெளியிட்ட கருத்து.

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறார்களுக்கும் கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தென் மாகாண கொவிட் – 19 சிறுவர் சிகிச்சை பிரிவை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

தங்காலை கால்ட்டன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டிலுள்ள 99 கல்வி வலயங்களுக்கு, தலா ஒவ்வொரு விசேட வைத்திய நிபுணர் என்ற அடிப்படையில் நியமித்து, பிள்ளைகளை காண்காணிக்கும் நடவடிக்கையொன்றை மேற்கொள்வது தொடர்பிலான யோசனையை வைத்திய நிபுணர்கள் முன்வைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை தொடர்ச்சியாக மூடுவதற்கு விருப்பமில்லை என கூறிய அவர், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி, நாட்டு மக்களின் உயிரை காக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.