பயணக்கட்டுப்பாட்டை தளர்த்தும் விடயத்தில் அவசரப்படக் கூடாது - WHO எச்சரிக்கை!

உலக நாடுகளுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் ஒவ்வொரு நாடும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது உலக நாடுகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாரந்தோறும் மில்லியன் கணக்கான கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர். அதேபோன்று ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

எனவே பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் உலக நாடுகள் அவசரப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.