2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாமையாலும், அழகியல் செயன்முறை பரீட்சை நடாத்தப்படாமையாலும் மாணவர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைத்தல் அல்லது நடத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment