அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான செய்தி.

குறைந்தளவான பணியாளர்கள் பணிக்கு அழைக்கப்படுவதன் காரணமாக, நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து அரச ஊழியர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.