கொழும்பை முற்றுகையிட்ட அதிபர் - ஆசிரியர் சங்கங்கள்; போக்குவரத்தும் ஸ்தம்பிதம்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, இவ்வாறு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று (22) காலை முதல் இடம்பெற்று வரும் ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படையில் இடம்பெற்றுவரும் இப்போராட்டம் காரணமாக, புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதியிலிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்களது சம்பள முரண்பாடு, உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்திற்கு எதிராகவும், ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் 11 நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய இன்றையதினம் 30 தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள், அதிபர்கள் விலகியுள்ளனர்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உடன் நேற்றுமுன்தினம் (20) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.