சம்பள பிரச்சினைகளை முன்வைத்து, இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை எதிர்வரும் நாட்களில் பெற்றுக்கொடுப்பதாக கல்விமையச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள், தங்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணவர்கள், கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படுகின்றனர் என்றும், கொரோனா தொற்றுநோயுடன் நாடு போராடும் இந்த முக்கியமான கட்டத்தில் தங்கள் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்கின்றன என்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கைகளில் இதுதொடர்பானமிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஹொரனையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment