உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்ட போதிலும் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார். 

இம்முறை சுமார் 2 இலட்சம் மாணவர்கள், முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், தமக்கான பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் பரீட்சையை பிற்போடுமாறு கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாவது தடவையாக உயர் தர பரீட்சையில் தோற்றும் சுமார் 1,50,000 மாணவர்கள், பரீட்சையை பிற்போட வேண்டாம் என கோரியுள்ளதால், இந்த விடயம் குறித்து நியாயமான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.