உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கொத்தணி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு.

உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும், இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த நீலக் கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பாதுகாப்பு கருதி இரகசியமாக பேணப்படுகிறது.

இக்கல்லை பட்டைத்தீட்டுவதற்கு ஒரு வருட காலத்துக்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

பட்டைத் தீட்டப்பட்டதன் பின்னர் அதன் சந்தைப் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.