மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.

பொதுமக்களுக்கு மரண நிகழ்வு அல்லது திருமண நிகழ்வுகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த தேவைகளுக்காக நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இரண்டு மாகாணங்களை சேர்ந்த குடும்பங்களில் திருமண நிகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் அதன்போது, இருவீட்டார் மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் 150 உறுப்பினர்கள் மாத்திரம் பங்குக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.