பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அவ்வாறு அணியத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமை ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.