பாடசாலைகளை ஆரம்பித்தால் மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தாது, ஆசிரியர்களுக்கு மாத்திரம் தடுப்பூசியை செலுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்கின்றமை, பாதுகாப்பான நடைமுறையாக அமையுமா என்பது குறித்து சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்குகின்றமை தொடர்பில் இதுவரை சரியான பரிந்துரைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இதனால், கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதே, மாணவர்களுக்கு உள்ள ஒரே வழி என அவர் குறிப்பிடுகின்றார்.

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும் பட்சத்தில், மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.