புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு.

இவ்வருடத்துக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 காரணமாக குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.