நாட்டில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று(09) சனிக்கிழமை மாலை பார்க்கப்பட்டது. எனினும் தலைப்பிறை தென்படாமையினால் துல்கஃதா மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து, ஜூலை 12ஆம் திகதி திங்கட்கிழமை துல்ஹஜ் மாதம் ஆரம்பிக்கப்படும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
இன்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் ஜூலை 20 அரபா தினமாகவும், ஜூலை 21 ஹஜ் பெருநாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment