கண்டியில் ஐந்து மாடி கட்டடம் தாழிறக்கம்! - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை குருணாகலை - கட்டுகஸ்தோட்டை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் தாழிறங்கியுள்ள காரணத்தால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.