எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு.

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லங்வில ரஜமஹா விகாரைக்கு நேற்று (08) மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட நிதி அமைச்சர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டதுடன் நாட்டின் பொருளாதார நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.