றிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

16 வயது சிறுமியொன்றினை வேலைக்கு அமர்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவரும், மற்றுமொரு 22 வயதான யுவதியை துஷ்பிரயேகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியுடன் அவரது தந்தை மற்றும் சிறுமியினை கொழும்புக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு 22 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரல்ல பொலிஸாருடன் இணைந்து பல பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.