மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான செய்தி.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு எதிர்வரும் கிழமை பெரும்பாலும் அனுமதி கிடைக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு கொரோனவை கட்டுப்படுத்தும் செயலணியினால் இதுவரை அனுமதி கிடைக்க வில்லை என்றும் எனினும் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கோரப்பட்டது எனினும் அதட்கான அனுமதி மறுக்கப்பட்டாலும் எதிர்வரும் புதன்கிழமை வரை நோயாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் 100  ரயில்கள் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் எனவும் ரயில்வே ஒருங்கிணைப்பாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.