வழமைக்கு மாற்றமாக நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் - காரணத்தை வெளியிட்டார் இராணுவத் தளபதி!

நாட்டில் நேற்று(05)  869 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 266211 ஆக உயர்வடைந்துள்ளது.

அவ்வாறே, கொவிட் தொற்றில் இருந்து இன்று மேலும் 1625 பேர் குணமடைந்தனர். இதன்படி இதுவரையில் 234942 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் தற்போது 28,001 தொற்றாளர்கள் மாத்திரமே சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்வேறு கோரிக்கை முன்வைத்து 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆய்கூட தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், நேற்றைய தினம் மிகக்குறைந்த அளவிலேயே பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றன. மேலும் சில பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதமும் ஏற்பட்டுள்ளது.

ஆகையினாலேயே நேற்று வெளியான தொற்றாளர் எண்ணிக்கை குறைவை காட்டியதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.