கடும் பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுலாகுமா?

இலங்கையில் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றதுஶ

இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பு, இரத்மலானை, பிலியந்தலை, நீர்கொழும்பு, காலி, தம்புள்ளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயே டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4054ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக நேற்று முன்தினம் 52 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும், 26 பெண்களும் அடங்குவதாக திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், பயணக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் பிரதான வைரஸாக டெல்டா வைரஸ் பரவும் சாத்தியம் காணப்படுவதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

ஏனைய வைரஸ்களை விடவும் டெல்டா வைரஸின் பரவல் வேகம் அதிகம் என்பதை கருத்திற்கொண்டே, தாம் இந்த அபாய எச்சரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.