கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அறிவிப்பு

தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரணங்களில் அதிகமானவை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது கொவிட்19 அலையால் நாட்டில் 13 கொவிட்-19 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன.

இரண்டாவது அலையில் 591 கொவிட்-19 மரணங்களே சம்பவித்திருந்தன.

எனினும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கொவிட்-19 மூன்றாவது அலையில் மாத்திரம் 3,450 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றாவது கொவிட் அலை இதுவரையில் முடிவு காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வழங்கப்படும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.