மக்களுக்கு நிவாரணம்; நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

நாட்டை திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும் சரியான பொருளாதார மேலாண்மை மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு பல முறை மூடப்பட்டதால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து அரசாங்கத்திற்கு பணம் கிடைத்த முறை தடைபட்டுள்ளதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பணப்புழக்க முறை செயல்படுத்தப்பட வேண்டுமானால் விரைவில் நாடு திறக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று(17) காலை அலரி மாளிகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை விரைவில் குறைப்பதே தனது முதல் குறிக்கோள் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.