துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி – ஜனாதிபதியும் அனுமதி!

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு உயர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.