நாளை முதல் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.

நாட்டில் கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ள இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,
 • பொது போக்குவரத்து: அனைத்து மாகாணங்களிலும் ஆசன எண்ணிக்கையில் 50% மட்டுப்பாடு; மேல் மாகாணத்தில் ஆசன எண்ணிக்கையில் 30% மட்டுப்பாடு தனியார்/ வாடகை வாகனங்கள்: ஆசன எண்ணிக்கையில் மட்டுப்பாடு
 • அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அவசியத்தின் அடிப்படையிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் பேணுவதற்கும், முடியுமான வரை வீட்டிலிருந்து பணியாற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
 • வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும் என்பதோடு, 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவை வழங்க அனுமதி
 • பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பல்பொருள் அங்காடிகள், ஆடையகங்களில் ஒதே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும்
 • முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றிற்கு விருந்தினர்கள வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 • நீச்சல் தடாகங்களை திறக்க அனுமதியில்லை. சமய நிகழ்வுகள் உள்ளிட்ட வீடுகளில் மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதியில்லை.
 • 10 பேருடன் பதிவுத் திருமணம் செய்யலாம் ஆனால் திருமண நிகழ்விற்கு அனுமதியில்லை.
 • அனைத்து மதத் தலங்கள், சினிமா கொட்டகைகள், கெசினோ, பார்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
 • சுகாதார வழிகாட்டுதல்களுடன் சிகையலங்கார நிலையங்கள் செயற்பட அனுமதி. ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி.
 • பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி
ஆகிய விதிமுறைகள் உள்ளிட்ட 47 விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.