மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம் − யாருக்கு செல்ல அனுமதி?

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (14) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு பயணிப்போர் தமது நிறுவன அடையாள அட்டை அல்லது பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான எழுத்துமூல ஆவணத்தை வைத்திருப்பது கட்டாயமானதாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணங்கள் வீதித் தடைகளில் பரிசோதிக்கப்படவுள்ளன.

குறித்த ஆவணங்களை கொண்டிராதவர்களை திருப்பி அனுப்புவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

இதனிடையே, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக இன்று (14) முதல் மேலதிகமாக 14 ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படுத்துவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய தேவைக்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மாத்திரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டின் போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான விசேட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.