ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஸவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸவின் பெயர் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று முற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இவரின் இராஜினாமாவால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக பசில் ராஜபக்ஸவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்வரும் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுள்ளதாக தெரிவித்தார்.
Post a Comment