பயணக் கட்டுப்பாட்டை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்த அறிவிப்பு

மக்கள் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவார்களேயானால், கடந்த காலங்களை போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

நாட்டின் பல பகுதிகளில் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் பரவல் காணப்படுகின்றமையினால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேவையற்ற பயணங்களை தவிர்த்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வார இறுதி நாட்களில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.