தன்னை நாடாளுமன்றுக்கு வரும்படி அழைத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகப்புபுத்தகத்தில் அவர் இன்று அறிக்கையொன்றை பிரசுரித்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்ஷ, தனக்காக பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொடவுக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கின்றார்.
Post a Comment