ஒன்லைன் வசதிகளற்ற மாணவர்களுக்காக கற்கை நிலையங்கள் - கல்வி அமைச்சினால் ஆரம்பம்.

ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வசதிகளற்ற மாணவர்களுக்காக நாடு முழுவதும் 2,096 கற்கை நிலையங்கள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒன்லைன் மூலமாக பாடசாலை கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் 2096 கற்றல் மத்திய நிலையங்களை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் இரண்டு கற்றல் மத்திய நிலையங்களை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள கல்வியமைச்சர்;

நாட்டின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு பிள்ளைகளின் கல்வியை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்காக ஒன்லைன் மூலமான கல்வி கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனினும் சில கஷ்டப் பிரதேசங்களில் நிலவும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாக அப்பகுதி பிள்ளைகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதற்கு தீர்வாக மொபிடல் நிறுவனமும் கல்வி அமைச்சும் இணைந்து நாடு முழுவதும் 2096 மத்திய நிலையங்கள் ஆரம்பித்துள்ளன. மாவட்ட இணைப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ,மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் , அதிபர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து மத்திய நிலையங்களுக்கும் கணனி, டெப் உபகரணங்கள், மடிக்கணனி மற்றும் இன்டர்நெட் வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அந்த மத்திய நிலையங்களில் உள்ளடங்குகின்றன. குறிப்பாக கஷ்டப் பிரதேச கிராமங்களில் பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு வசதியாகவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.