பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது.

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில்,
  1. எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வழிபாட்டாளர்கள் 100 (நூறு மட்டும்) அனைத்து கோணங்களிலிருந்தும் தனி நபர்களிடையே ஒரு மீட்டர் உடல் தூரத்தை பேணுதல் வேண்டும்.
  2. வரிசைகள் (சப்f) இடையே ஒரு வரிசை (சப்f) இடைவெளி இடப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட வேண்டும்.
  3. ஜும்ஆ தொழுகையில் குத்பா மற்றும் தொழுகை 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  4. பள்ளிவாயலில் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும்.
  5. தொழ வருபவர்கள் தங்களது முஸல்லாக்களை கொண்டு வர வேண்டும்
  6. தொழுகைக்காக வீட்டிலிருந்து விழூ செய்து கொண்டு வர வேண்டும்.
  7. பயணிகளுக்கு வெளி ஊர் பள்ளிவாயல்களில் தொழுவதற்கு அனுமதி இல்லை.
  8. காய்ச்சல், இருமல், தடுமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவை உள்ளவர்கள் பள்ளிவாயல்களுக்கு செல்லக்கூடாது.
  9. கை குழுக்குதல் அல்லது கட்டியணைத்தல் (முஸாபஹா செய்தல்) போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.
  10. பள்ளிவாயல் மற்றும் அதனைச் சூழ வெறுமனே சுற்றித் திரிதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

முழுமையான சுகாதார வழிகாட்டி👇

சுகாதார அமைச்சின் இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.