கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து வெளியான செய்தி...

தற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கூறினார்.

இதுவரை 05 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த தொற்று மேலும் பரவலடைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் இதுவரை எந்தவித இறுதித் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கை ஒன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்போவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளமைை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.