பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு.

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், முதற்கட்டமாக நாடு முழுவதும் 100ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 2,42,000 ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.