உடனடி பொது முடக்கத்திற்கு தயாராகிறதா இலங்கை? தீவிரமாக ஆராயும் அரச உயர்மட்டம்!

கொவிட் தீவிரத்திற்கு மத்தியில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு இலங்கையில் பல பிரதேசங்களில் பரவியிருக்கலாமென அஞ்சப்படுவதால் உடனடி பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறியமுடிவதாக தமிழன் பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச உயர்மட்டததில் இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இந்த விடயம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதன் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் டெல்டா திரிபு என்ற சந்தேகத்தில் பல கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்கும் நோக்கத்தில் இவ்வாறு பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது.

மேலும் தற்போதுள்ள தரவுகளை கொண்டு நாட்டின் கொவிட் நிலைமைகளை மூடி மறைக்க நினைத்தாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் உண்மையான நிலைமை என்னவென்பது வெளிப்பத்தான் போகின்றதென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.