பிரதமர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்கள் இடம்பெயர்வு கொடுப்பனவின் கீழ் தமது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவதை மட்டுப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நிதி அமைச்சர் என்ற வகையில், வௌிநாட்டு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நியதி இன்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜை ஒருவர் வௌிநாட்டிலுள்ள தமது குடும்ப உறுப்பினருக்கு அனுப்பும் பணத்தை இடப்பெயர்வு கொடுப்பனவின் கீழ் அனுப்புவதை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 9 விடயங்கள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.