ஒரு சில காரணத்திற்காக மாத்திரமே, மாகாண எல்லையை கடக்க பொதுமக்களுக்கு அனுமதி.

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மாத்திரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 49,259 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.