சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நமது நாட்டின் சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் இம்மக்களுக்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது குறித்து சிந்தித்தோம்.
கொடுப்பனவுகளை வழங்கி இம்மக்களை ஒரே இடத்தில் இருப்பதை மாற்ற வேண்டும் என நாம் விரும்பினோம். சௌபாக்கிய சமுர்த்தி வாரம் அதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுபீட்சத்தின் நோக்கில் செயற்திறனான குடிமகன் போன்றே மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் எனும் எண்ணக்கருவை முன்னோக்கி நகர்த்தியுள்ளோம்.
இதனூடாக முழுமையான வதிவிட பொருளாதாரத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்திலும் அம்மக்களை வளப்படுத்துவதே எமது நோக்கமாகும். தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உள்ளாகியுள்ளது.
நமது நாடும் அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆனால் அனைவரதும் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முறையாக முன்னோக்கி முன்னெடுத்து செல்ல எமக்கு இன்று முடிந்துள்ளது. அது தொடர்பில் மக்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றமை அரசாங்கத்திற்கு வழங்கும் பலம் என்பதை நான் இங்கு நினைவூட்ட வேண்டும்.
தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லும் நோக்கில் நாம் பணியாற்றி வருகின்றோம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இன்று ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மக்களை நேரடியாக நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்க செய்ய வாய்ப்புள்ளது.
அவர்களுக்கு மாற்று வருமான மார்க்கம் எற்படுத்தப்படுவதன் மூலம் அவர்களது வாழ்க்கை நிலையும் உயர்வடையும். இன்று இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராம பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இராஜாங்க அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment