மாகாணம் தாண்டிய பஸ் மடக்கிப்பிடிப்பு – 38 பேர் கைது!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி, மட்டக்களப்பில் இருந்து, கொழும்புக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்று காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேருந்தின் சாரதி உட்பட அதில் பயணித்த 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த பேருந்தை காவல்துறையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன், குறித்த பேருந்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.