பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்தார் ரணில் விக்ரமசிங்க.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதன்படி, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று மாத்திரம் கிடைக்கப்பெற்றது.

குறித்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க அந்த கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.