பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில் பயணிப்போரை, உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நபர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
Post a Comment